Entertainment
கமல் ஹாசனிடம் ஃபாத்திமா பாபு கூறியது என்ன?
பிக் பாஸ் சீசன் 3 விஜய் தொலைக்காட்சியில் கடந்த 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் நேற்று ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.
ஏற்கனவே வெளியேறுவதற்குத் தயாராக இருந்த ஃபாத்திமா பாபு, கமல் ஹாசனை சந்தித்து பேசினார், அப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் தனக்கு இருந்த அனுபவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனது குடும்ப உறுப்பினர்களை மக்கள் முன் அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும், தர்ஷன், லோஸ்லியா ஆகியோர் மற்றவர்களுடன் இணைந்து இருப்பதில்லை. வனிதா, அபிராமி, சாக்ஷி, ரேஷ்மா, ஷெரின் ஆகியோர் அனைவரும் ஒரே கூட்டணியில் இருப்பவர்கள்.
சரவணன், எளிமையாக இருக்க விரும்புகிறார், எளியோரை ஆதரிக்கவும் விரும்புகிறார். சாண்டிதான் அனைவருக்கும் எண்டர்டெய்னர், அவரால் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும் என்று கூறினார்.
வெளியேறுபவர்களுக்கு அடுத்த வாரத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உள்ளது, தலைமைப் பொறுப்புக்கு அபிராமி, தர்ஷன், சாண்டி ஆகியோர் தான் தகுதியானவர்கள் என்று கூறினார் ஃபாத்திமா.
அதாவது, அபிராமியின் தற்போதைய வெளியேறும் மனநிலையை உடைக்கவும், சாண்டி நகைச்சுவையுடன் கோபப்படாமல் தலைவராகப் பணியாற்றுவார் என்பதற்காகவும், தர்ஷன் ஃபைனல் வரை இருக்க வேண்டும் என்று கூறி மற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்து கூறி வீட்டை விட்டு வெளியேறினார்..
