Connect with us

தனுஷ் நீங்க பண்றது நியாயமே இல்ல… தனுஷ் மீது கடுப்பில் இருக்கும் தயாரிப்பாளர்கள்….!

தனுஷ்

பொழுதுபோக்கு

தனுஷ் நீங்க பண்றது நியாயமே இல்ல… தனுஷ் மீது கடுப்பில் இருக்கும் தயாரிப்பாளர்கள்….!

தனுஷ் நீங்க பண்றது நியாயமே இல்ல… தனுஷ் மீது கடுப்பில் இருக்கும் தயாரிப்பாளர்கள்….!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்து வரும் நடிகர் தான் தனுஷ். இவர் தற்போது தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இதில் மாறன் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் மாறன் படத்தில் இடம்பெற்றுள்ள பொல்லாத உலகம் என்ற பாடல் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் தனுஷின் நடனம் மற்றும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷின் அட்டகாசமான இசை ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி தனுஷ் முன்பு போல அல்லாமல் மிகவும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் மாறன் படத்தையும் அப்படி தான் தனுஷ் தேர்வு செய்துள்ளார். தனுஷ் என்னதான் நடிப்பில் கிங்காக இருந்தாலும் தயாரிப்பாளர்கள் தனுஷ் மீது உச்சக்கட்ட கடுப்பில் இருக்கிறார்களாம்.

அதன்படி நடிகர் தனுஷ் அவர் நடிக்கும் தமிழ் படங்களின் புரோமோஷன்களில் ஈடுபடுவது இல்லையாம். ஆனால் தான் நடிக்கும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களுக்கு மட்டும் தனுஷ் புரமோஷன் செய்து வருகிறாராம். எனவே தனுஷின் இந்த செயலானது தயாரிப்பாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் தமிழ் சினிமாவில் ஏற்கனவே டாப் நடிகராக வளர்ந்து விட்டார். இனி அவருக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இப்போது தான் தனுஷ் கால்பதித்துள்ளார். இதுபோன்று அங்கு கெத்து காட்டினால் தூக்கி வீசிடுவார்கள் என்ற பயத்தில் அங்கு மட்டும் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார் என கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top