கண்திருஷ்டியைப் போக்க ரொம்ப ரொம்ப ஈசியான வழி இதுதாங்க…!

உப்பு, மிளகாய்வற்றல், படிகாரம் என எத்தனையோ முறைகள் கண்திருஷ்டியைப் போக்க செய்வதுண்டு. தற்போது பருத்திக்கொட்டை, உப்பு, மிளகாய் உள்பட கண்திருஷ்டி பரிகார தொகுப்பு பாக்கெட்டுகளில் கடைகளில் விற்கப்படுகிறது. கண்திருஷ்டி நிறைய உள்ளவர்கள் இதை வாங்கி எரியும் தீயில் போட்டால் அதிலிருந்து வரும் புகையால் நமக்கு தொண்டைகமறல் வராது.

சாதாரணமாக நாம் ஒரு வற்றலை அடுப்பில் போட்டு சுட்டாலே தொண்டைக்கமறல் வந்துவிடும். மூக்கைப் பொத்திக்கொள்வோம். அப்படி இருக்கையில் இந்த கண்திருஷ் பரிகாரத்திற்கு வரவில்லை என்றால் நிறைய கண்திருஷ்டி உள்ளது என்று அர்த்தம். தற்போது அதை விட எளிய முறையைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று சொல்வார்கள். நல்லா வாழ்ந்துகிட்டு இருக்கிறவற ஈசியா கெடுக்கக்கூடியது தான் கண் திருஷ்டி.

Aakasa karudan kilangu
Aakasa karudan kilangu

ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி, வீட்டுக்கே ஏற்படும் திருஷ்டி, மாந்திரீக எதிர்வினைகள், தோஷங்களைப் போக்க வல்லது தான் ஆகாச கருடன் கிழங்கு. இது ஒரு மாந்திரீக மூலிகை.

இந்தக்கிழங்கைக் கிராமப்புறங்களில் உள்ள வீட்டு வாசல்களில் கட்டித் தொங்கவிட்டால் கழுகு போன்று தோற்றமளிக்கும். இதை நாம் கண்கூடாகப் பார்த்திருப்போம். இது இயற்கையான கிருமிநாசினி. தொற்றுநோய்கள் கூட வராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.

இது காடுகளில் வளரும் அபூர்வ மூலிகை. ஆனால் தற்போது கோவில் வாசல்களில் கூட விற்கிறார்கள். நாம் எளிதில் வாங்கி விடலாம். இதனை கொல்லன்கோவை, பெய்சீமா என்றும் சொல்வார்கள். காட்டில் மட்டும் வளரக்கூடிய கொடி வகையைச் சேர்ந்தது இது. நிலத்தின் அடியில் விளையும் கிழங்காக இது இருந்தாலும் இதனை ஆகாசக்கருடன் கிழங்கு என்கிறோம்.

இது எதற்காக என்று பார்க்கலாம். பொதுவாகவே பாம்பு வகைகள், விஷ ஜந்துகள் பூமியில் ஊர்ந்து செல்லும்போது ஆகாசத்தில் கருடனைப் பார்த்து விட்டால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதுபோன்று இந்தக்கிழங்கின் வாசனை அறிந்தால் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகள் எல்லாம் ஓடிவிடும்.

kan thrishti kilangu
kan thrishti kilangu

இது விஷப்பூச்சிகளை விரட்டுவதோடு மட்டுமின்றி அமானுஷ்ய சக்தியைக் கொண்டது. வீட்டில் ஏற்படும் திருஷ்டி, தோஷங்களையும் போக்கி விடும்.

இந்தக்கிழங்கானது கோவில் கோபுரத்தைப் போன்ற தன்மை கொண்டது. அதாவது பிரபஞ்சத்தில் உள்ள பாசிட்டிவ் எனர்ஜியை ஈர்த்து அனுப்பும் சக்தி வாய்ந்தது. நெகட்டிவ் எனர்ஜியை தனக்குள்ளேயே வைத்துக்கொள்ளும். பாசிட்டிவ் எனர்ஜியை மட்டும் ஈர்த்து வீட்டுக்குள் அனுப்பும். இந்தக்கிழங்கைக் கட்டித்தொங்கவிட்டால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை வைத்தே இது வளர்ந்து விடும்.

அதனால் தான் இந்தக்கிழங்கிற்கு சாகா மூலிகை என்று ஒரு பெயரும் உண்டு. நீங்க கட்டுன கிழங்கு காய்ந்தோ கருகியோ போயிட்டுன்னா கவலையேப் படாதீங்க. வீட்டுல உள்ள ஏதோ ஒரு நெகடிவிட்டியைத் தான் கிழங்கு ஈர்த்து வைத்துள்ளது. அதைக்கழட்டித் தூர எறிஞ்சிட்டு வேறொரு கிழங்கைக் கட்டிக்கலாம்.

தீய வினைகளில் இருந்து நம்மைக் காக்க உதவுவது தான் ஆகாச கருடன் கிழங்கு. நிலைப்படில அல்லது ஜன்னல்ல கட்டலாம். ஏவல், பில்லி, சூனியம் இவற்றிலிருந்து நீங்க வேண்டுமானால் இந்த ஆகாச கருடன் கிழங்கைக் கட்டித் தொங்க விடுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.