என்னங்க சொல்றீங்க கிலோ 4000 ரூபாயா? விண்ணைத்தொடும் விலையால் மக்கள் அதிர்ச்சி…..

நீரின்றி அமையாது உலகு என கூறுவார்கள். அது என்னமோ உண்மை தான் நீர் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு நீர் அவசியமான ஒன்று. அதேபோல் விவசாயம் செய்யவும் நீர் மிகவும் முக்கியம். ஆனால் அதே நீர் அளவிற்கு அதிகமாகும் போது ஆபத்தும் ஏற்படுகிறது.

மல்லிகை

விவசாயத்தை பொருத்தவரை ஒவ்வொரு பயிருக்கும் எந்த அளவிற்கு நீர் செல்ல வேண்டும் என ஒரு அளவு உள்ளது. அந்த அளவு அதிகாரித்தால் பயிர் அழுகிவிடும். ஒருவேளை குறைந்தால் பயிர் கருகிவிடும். இப்படி உள்ள சூழலில் மழை பெய்தாலும் பிரச்சனை பெய்யவில்லை என்றாலும் பிரச்சனையாக உள்ளது.

மழை பெய்றதால என்ன பிரச்சனைனு தான கேட்கறீங்க. மழை பெய்றது பிரச்சனை இல்லைங்க அளவுக்கு அதிகமா பெய்றது தான் பிரச்சனை. சமீபகாலமாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறிகள் மட்டும் அல்லாமல் பூக்களின் விலையும் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை உச்சத்தில் உள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை பூ சுமார் 4000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக மல்லிகை பூக்கள் வரத்து குறைந்து, தேவை அதிகரித்துள்ளதால் வரலாறு காணாத அளவுக்கு விலை அதிகரித்துள்ளது.

மல்லிகை பூ மட்டுமல்ல கனகாம்பரம் பூ கிலோ 2000 ரூபாய், முல்லை பூ கிலோ 1500 ரூபாய், பிச்சி பூ கிலோ 1200 ரூபாய் என அனைத்து பூக்களுமே விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த விலை தொடர்ந்தால் பூக்களை வாங்க அல்ல பார்க்க மட்டும் தான் முடியும் போல.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment