என்ன சொல்றீங்க ஜனவரி மாசம் இத்தனை நாள் பேங்க் லீவா? அதிலும் 9 விடுமுறைகள் முடிந்து விட்டதா?
பொதுவாக அதிக விடுமுறை கிடைக்கும் வேலை இது என்று கேட்டால் பலரும் கூறுவது வங்கி வேலைதான். இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அனைத்து தனியார் மற்றும் அரசு வங்கிகளும் பல்வேறு மாநிலங்களில் ஜனவரி 16, 2012 ஆம் ஆண்டு முதல் மொத்தம் ஏழு நாட்களுக்கு மூடப்படும்.
வாராந்திர விடுமுறைகள் தவிர பல்வேறு மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும் மற்ற விடுமுறை காரணமாக ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் 16 நாட்கள் வரை மூடப்படும். இதில் 9 விடுமுறைகள் ஏற்கனவே முடிந்து விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி இல் வெளியிடப்பட்ட வங்கி விடுமுறைகள் பட்டியலின் படி இந்தியாவில் புவனேஸ்வர், சண்டிகர், போபால் ,கொச்சி, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் குடியரசு தினத்தன்று வங்கி திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2022 ஜனவரி மாதத்தின் இரண்டாவது பகுதியின் வங்கி விடுமுறை நாட்கள்:
- ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், பொங்கல் விடுமுறை.
- ஜனவரி 18 தைப்பூசம் விடுமுறை
- ஜனவரி 26 குடியரசு தின விடுமுறை .
2022 ஜனவரி மாதத்தின் வார விடுமுறை நாட்கள்:
- ஜனவரி 16, 2022 ஞாயிற்றுக்கிழமை
- ஜனவரி 22, 2022 4 வது சனிக்கிழமை
- ஜனவரி 23 ஞாயிற்று கிழமை
- ஜனவரி 30 ஞாயிற்று கிழமை.
