பிக்பாஸ் ரசிகர்களால் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பிக்பாஸ் கொண்டாட்டம் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான புரோமோ விடியோ வரிசையாக வெளிவந்து கொண்டு வருகிறது.
இந்த பிக்பாஸ் கொண்டாட்டத்தில் சீசன் 5 இல் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவரும் பங்கேற்று உள்ளனர். பொதுவாக பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி என்றால் போட்டியாளர்களை கலாய்க்கும் நிகழ்ச்சி தான்.
அந்த வகையில் இந்த பிக்பாஸ் கொண்டாட்டத்தில் டைமிங் காமெடி பஞ்ச் டயலாக் பாலா களமிறங்கியுள்ளார். அவர் பிக்பாஸ் கொண்டாட்டத்தை பற்றி மட்டுமல்லாமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பற்றியும் கூறினார்.
அதன்படி ஒட்டுமொத்த வேலையில்லாத பிரபலங்களை ஹோல் சேலில் புக் பண்ணி எடுத்து அவர்கள் மூலமாக கண்டன்ட் ஏதாவது கிடைக்குமா? என்று எதிர்பார்த்து நடக்கிறதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்று கூறி சுற்றியுள்ள பலரையும் சிரிப்பு வலையில் கட்டி எடுத்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்துகொண்ட சின்ன பொண்ணு பற்றியும் அவர் கலாய்த்து தள்ளியுள்ளார்.
இதனால் நடக்க இருக்கின்ற பிக்பாஸ் கொண்டாட்டம் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கும் என்பது தவிர்க்க முடியாததாக காணப்படுகிறது.