என்னது அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் புரூஸ்லியா? ஒற்றை ஆளாக சட்டையை கழட்டி கெத்து காட்டும் சிறுவன்….

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் ஜல்லிக்கட்டு போட்டி என்றால் பலரும் முதலில் கூறுவது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தான். இந்த மதுரையில் உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்றைய தினம் நடைபெற்று வருகிறது.

இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பாலமுருகன் என்ற 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் மாடு முட்டியதில் உயிரிழந்துள்ளார். இந்த சூழலில் திமிரிக்கொண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வாசலைத் திறந்து பாய்ந்து வருகிறது. அந்த ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் முயற்சியில் வீரத்தோடு திமில் பிடிக்கும் முயற்சியில் இளைஞர்கள் காணப்படுகின்றனர்.

இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் திடீரென்று ப்ரூஸ்லீ போல ஒரு சிறு பையன் இறங்கியது வர்ணனையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அந்த சிறுவன் தனது சட்டையை கழட்டி விட்டு சுற்றிக் கொண்டு களத்தில் உள்ளார். அவர் களத்தில் கூட்டத்தோடு இல்லாமல் தனியாக நின்று கொண்டு காளைகாக எதிர்பார்த்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தார். அவரைப்பார்த்த வர்ணனையாளர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கிய ப்ரூஸ்லி என்று வர்ணனை செய்து கொண்டு வருகின்றனர்.

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Ceq1Taz7ZfI” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment