நீ என்ன ….. நிரூப்பை வெளுத்து வாங்கும் பாலா!!

ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சியினை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் விக்ரம் பட வேலைகளுக்காக அடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக கூறி வெளியேறினார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்குவதால் போட்டிகளும் கடுமையாக்கப்பட்டுதான் வருகிறது.

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வையல் கார்டு என்ட்ரியாக வந்த கலக்கப்போவது யாரு வந்த சதிஷ் போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது தாமரை, நிரூப், பாலா, ஜூலி, அபிராமி, சுருதி, ரம்யா ஆகியோர் உள்ளனர்.

இந்த சூழலில் தற்போது நிரூப் மற்றும் பாலா இருவரும் முட்டிகொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பாலாவை பார்த்து நீ என்ன பிக்பாஸ் என்று கேட்டுள்ளார்.

மேலும்,  பாலா நான் என்ன உன்னமாதிரியா இருக்கன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் கடும் மோதல்  நிலவியதால் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

 

மேலும் உங்களுக்காக...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment