Connect with us

குடும்பம் சிறப்பாக இருக்க இதுதான் ரகசிய வழி…! இதில் தான் நாம் திருப்தி அடைய வேண்டுமாம்…!!!

Chanakya special

வாழ்க்கை முறை

குடும்பம் சிறப்பாக இருக்க இதுதான் ரகசிய வழி…! இதில் தான் நாம் திருப்தி அடைய வேண்டுமாம்…!!!

நாம் அனைவரும் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் பல நல்ல வழிமுறைகளை எடுத்துக் கூறியுள்ளனர்.
ஒரு நாடு எப்படி இருந்தால் முன்னேறும்…குடும்பம் எப்படி இருந்தால் சிறப்பாக அமையும் என்பதை சாணக்கியர் திறம்பட எடுத்துக் கூறியுள்ளார்.

ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் இவர்களுடன் மட்டும் வாழ்ந்து விடவேக் கூடாது. இவர்கள் கொடிய விஷப்பாம்புவைப் போன்றவர்கள். இவர்களால் ஒருநாள் நிச்சயம் நமக்கு மரணம் உண்டாகும்.

ஒருவன் தன் கஷ்டகாலம் வரும் முன்பே தேவையான பணத்தைச் சேர்த்து விட வேண்டும்.

ஒருவரைப் பற்றி நாம் அறிய வேண்டுமானால் அவ்வளவு எளிதில் அறிந்து விட முடியாது. வேலைக்காரனை வேலை செய்யும் போதும், நண்பனை ஆபத்து நேரும்போதும், உறவினர்களைக் கஷ்டம் வரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், துரதிர்ஷ்டமான காலங்களிலும் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

கூரிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்பக்கூடாது.

ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றைப் பற்றி அறிவாளி எவனும் வெளியே சொல்ல மாட்டான்.

அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.

ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும் நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் இருக்க வேண்டாம்.

நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல வசதிகள் இருந்து ஒருவன் கல்வி மட்டும் கற்காமல் போனால் அவன் வாசனையற்ற மலருக்குச் சமம்.

உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள். 5 – 15 வயது வரை தவறு செய்தால் தடியால் கூட அடியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.

well family

well family

கற்பது பசுவை போன்றது. அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும். அது தாயைப் போல எங்கு சென்றாலும் நம்மை காக்கும். அதனால் அவ்வையார் சொன்ன படி ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் ஒவ்வொரு நாளையும் நம் வளர்ச்சியின் படிக்கட்டுகளாகப் பார்க்க வேண்டும்.

கடலில் பெய்யும் மழை, பகலில் எரியும் தீபம், உள்ளவனுக்குக் கொடுக்கும் பரிசு, நோய் வசதி உள்ளவனுக்குக் கொடுக்கும் அறுசுவை உணவு பயன்தராது. அது போல முட்டாளுக்குக் கூறும் அறிவுரையாலும் எந்தப் பயனும் இல்லை.

காமத்தை விட கொடிய நோய் எதுவும் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி யாரும் இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை.

எவன் ஒருவனிடம் செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள், நண்பர்கள் இருப்பார்கள். பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத் தான் அறிவாளி, பண்டிதன் என்றும் போற்றுகிறது.

பிறவிக்குருடனுக்குக் கண் தெரியாது. அது போல காமம் உள்ளவனுக்கும் கண் தெரிவதில்லை. பெருமை உள்ளவனுக்கோ கெடுதி செய்வது தெரியாது. பணம் வேண்டும் வேண்டும் என்று அதற்காக எதையும் செய்யும் எண்ணம் கொண்டவனுக்கோ பாவம் அதுவென தெரியாது.

bad friend

bad friend

பேராசை கொண்டவனுக்கு பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் நாம் காரியம் சாதிக்கலாம்.

ஒருவன் தனக்குக் கிடைக்கும் மனைவி, உணவு, நியாயமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

யானையிடம் இருந்து ஆயிரம் அடி விலகி இருங்கள். குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள். கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டுச் சென்று விடுங்கள்.

எல்லா காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்கள். வளைந்து நெளிந்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டுகிறார்கள்.

அன்னம், நீர் உள்ள இடத்தில் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திற்குச் சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சிங்கத்தின் குகைக்குள் சென்றால் மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கும். நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். அதனால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.

 

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வாழ்க்கை முறை

To Top