
தமிழகம்
இனிவரும் கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 9 அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளதாகவும் நீர் பாசன துறை அறிவித்துள்ளது.
இதனால் தொடர்ந்து பல அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. மேலும் இன்று மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கைகளும் விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை எதிர் கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு அமைச்சர் வரிசையாக பதில் அளித்துள்ளார்.
அதன்படி தமிழகத்தில் கனமழையை எதிர்கொள்ள உரிய முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு மட்டும் கண்காணிப்பு அலுவலர்கள் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
மேலும் கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். மீட்பு குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
