வெள்ள தடுப்பு நடவடிக்கை: சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் வேண்டும்?

2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் தமிழகத்தில் கன மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பெய்த அதி தீவிர கனமழையால் பெருவாரியான சாலைகள் மழைநீர் மூழ்கியது. அதோடு மழை நீரும் ஆங்காங்கே தேங்கி காணப்பட்டது.

அதன்பின்னர் தேங்கிய மழைநீர் வடிகால் முறையில் விரைவாக அகற்றப்பட்டன .டிசம்பர் மாதத்தில் குறைந்த கனமழை திடீரென்று கடந்த வாரத்திற்கு முன்பு கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் மீண்டும் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

இந்தநிலையில் 2022ஆம் ஆண்டு வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.  மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவினர் முதலமைச்சரிடம் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment