Connect with us

நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்கள்?

Tamil Nadu

நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்கள்?

504a56c9106282515756b6e49ed11385

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் இன்று தமிழகத்தில் 2021 – 22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக காகிதங்கள் இல்லாத பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் வடிகால் ஏற்படுத்த ₹87 கோடி செலவில் திட்டம்

ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும் –

ரூ 100 கோடியில் கலைஞரின் நமக்கு நாமே திட்டம் மீண்டும் துவக்கப்படும் : நிதியமைச்சர்

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி  நிதி மூன்று கோடி ரூபாயாக மீண்டும் அளிக்கப்படும்

79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்

1000 புதிய பேருந்துகள் வாங்க ₹623.59 கோடி நிதி ஒதுக்கீடு!

பள்ளிக்கல்வித் துறைக்கு ₹32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு 

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உதவி உறுதி செய்யப்படும்

சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி விரைவாக தொடங்கப்படும்

சென்னையில் பொதுஇடங்களில் சுவரொட்டிகள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்; சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்

புதிதாக பெருநகர வளர்ச்சி குழுமங்கள் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஓசூரில் ஏற்படுத்தப்படும்

திருச்சியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் அமைக்கப்படும்

அடுத்த பத்தாண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும்

ரூ 9,370.11 கோடி ரூபாய் செலவில் கோவிட் நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டன

நீதித்துறைக்கு 1713.30 கோடி

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு 405.13 கோடி ஒதுக்கீடு

காவல்துறையில் 14,317 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை… காவல்துறைக்கு ரூ 8,930.29 கோடி ஒதுக்கீடு

கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் 

தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ 5 கோடி ஒதுக்கீடு… கீழடி, கொற்கை உள்ளிட்ட  தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட  தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்

தலைமைச்செயலகம் முதல் அனைத்து துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்

செம்மொழித் தமிழ் விருது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி வழங்கப்படும். விருதுத்தொகை 10 லட்சம் வழங்கப்படும் : நிதியமைச்சர்

பொதுநிலங்கள் மேலாண்மைக்கு தனியாக புதிய அமைப்பு உருவாக்கப்படும்

பெட்ரோல்,டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது-

2.05 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான தமிழ்நாடு அரசின் நிலங்கள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளன

இந்தியாவின் முதல்  ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் உருவாக்கப்படும்

ரூ 500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் ஒன்று அமைக்கப்படும்

புதிதாக 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படும்

ரூ 610 கோடி செலவில் நீர்நிலைகள் புனரமைப்பு திட்டம் — உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்

’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது

கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டம் ₹100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும் 

பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ₹500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்

தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ₹6,607 கோடி நிதி ஒதுக்கீடு

மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும்

குளங்களை தூர்வார ரூ.111.24 கோடி ஒதுக்கீடு

நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும், தேவையுள்ள இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகளை ஏற்படுத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கு குழு ஏற்படுத்தப்படும்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும்

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ₹1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 

ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ₹400 கோடி ஒதுக்கீடு 

கிராமப்புறங்களில் 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு –

“விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல அரசு உறுதியேற்றுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும் 

இவ்வாறு தமிழக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top