
தமிழகம்
‘அதி நவீன நுழைவாயில்கள்’….அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் ஏற்பாடுகள் என்னென்ன?
கடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழகமெங்கும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் மண்டபத்தை சுற்றிலும் தொண்டர்களின் எண்ணிக்கையும் முழக்கமும் அதிகமாக இருந்தது. அதே நாளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவான்மியூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிலையில் இந்த கூட்டம் இன்றைய தினம் 9.15 மணிக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆயினும் கூட ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு 9 மணிக்கு வெளியாகிறது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் மண்டபம் முழுவதும் அதிமுகவினர் குவிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அதிமுக பொது குழுவை ஒட்டி சென்னை வானரகம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் வந்து கொண்டே உள்ளனர்.
மேலும் பொதுக்குழு கூட்டத்தில் சில அதி நவீன நுழைவாயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் போலி அதிமுக செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களை தடுக்க மாநகர மண்டபத்தில் இத்தகைய நுழைவாயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
