இன்று உங்கள் வீட்டிற்கு கிருஷ்ணர் வருகிறார்… இதெல்லாம் வாங்க மறந்துடாதீங்க…!!!

கோகுலாஷ்டமி, கிருஷ்ணர் ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி என பல பெயர்களில் வழிபடுகின்றனர். கிருஷ்ணர் பிறந்தது இந்த அஷ்டமி நாளில் தான். அதுவும் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமியில் தான் பிறந்தார். அதை உலகில் உள்ள அனைவருமே கொண்டாடி மகிழ்கின்றனர்.

கிருஷ்ணர் வழிபாட்டு முறை எப்படி என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதை முறையாக செய்வது எப்படி என்று பார்ப்போம்.

பசுமாடுடன் இணைந்த கிருஷ்ணர் சிலை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். அதை முடிந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். வீட்டில் பட்சணங்களை செய்ய முடியாதவர்கள் பெரிய பெரிய கடைகளில் ரெடிமேடாக பாக்கெட் போட்டு விற்கிற செட்டை வாங்குங்க. நெய் முறுக்கு, அவல், பாயசம், தேங்காய் பர்பி, இனிப்பு சீடை என தங்களுக்குப் பிடித்த பலகாரங்களைச் செய்து படையலாக வைப்பர்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று பாதம் வைத்து வீட்டிற்கு அழைக்கும் விதமாக பாதம் வைங்க. கிருஷ்ணா வா கிருஷ்ணா வா வந்து எங்கள் குறைகளைத் தீர்க்க வா என மனமுருகி உள்ளன்போடு வேண்டுங்க. இன்று நீங்கள் என்ன வேண்டினாலும் அதைக் கண்ணன் தருவான் என்பது ஐதீகம்.

srikrishna 1
srikrishna

முன்னதாக கிருஷ்ணர் சிலைக்கு சந்தனம் குங்குமம் மாலை அணிவித்து அலங்காரம் செய்யுங்க. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வழிபாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முறையாக வழிபடுபவர்களுக்கு அடுத்த கிருஷணர் ஜெயந்திக்குள் அந்தக் கண்ணனே பிள்ளையாக வந்து தொட்டிலில் ஆடுவான். வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றி வழிபடுங்கள். வாசனை உள்ள எந்த மலராக இருந்தாலும் கிருஷ்ணருக்கு சூட்டி வழிபடலாம்.

கிருஷ்ணர் ஜெயந்தி அன்று செல்வம் சேர முக்கியமாக நாம் வாங்கக்கூடிய 5 முக்கியமான பொருள்கள் என்னென்ன? என்பதை நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கிருஷ்ணஜெயந்தி 19.8.2022 அன்று (வெள்ளிக்கிழமை) வருகிறது. வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட துன்பங்கள் இருந்தாலும் இன்று முறையாக வழிபட்டால் ஓடிவிடும்.

cow ghee
cow ghee

பூஜை அறையில் எப்போதும் போல் விளக்கேற்றுங்கள். விக்கிரகம் இருந்தால் அபிஷேகம் பண்ணுங்க. போட்டோவாக இருந்தால் சந்தனம், குங்குமம், அலங்காரம் பண்ணுங்க. பசும்பால், பசு நெய், தயிர், வெண்ணை, மோர் ஆகிய 5 பொருள்களும் இன்று கண்டிப்பாக வாங்குங்க.

இந்தப் பொருள்களை கிருஷ்ண ஜெயந்திக்காக பூஜை அறையில் முக்கியமாக வைங்க. அப்புறம் நைவேத்தியங்களாக என்ன வேண்டுமானாலும் வைங்க. இவற்றை வைத்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் நமக்குக் கிட்டும் என்பது ஐதீகம்.

lord krishna
lord krishna

உங்கள் வீட்டுச் செல்லக்குழந்தைகளின் காலடி தடத்தையே பச்சரிசி மாவில் முக்கிப் பதித்து கண்ணான கண்ணனே என் கண்ணா என கொஞ்சி கிருஷ்ணரை வீட்டிற்குள் அழைத்து வாங்க.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews