செம ஸ்டைலா பறக்கும் டாக்ஸி! வியந்துபோன வேர்ல்டு!!2024ல் நடைமுறைப்படுத்த திட்டம்!!!

தற்போது நாம் விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். ஏனென்றால் நாளுக்கு நாள் அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நடக்கின்ற மனிதன் பறக்கும் அளவிற்கு அறிவியல் கண்டுபிடிப்பு வியக்கத்தக்கதாக காணப்பட்டுள்ளது. பறக்கும் டாக்சி

இந்த நிலையில் விமானத்தை மிஞ்சும் அளவிற்கு தற்போது பறக்கும் டாக்சியின் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ரோமில் விமான நிலையத்தில் இருந்து நகரங்களுக்கு பயணிகளை கொண்டு செல்லும் பறக்கும் டாக்ஸியில் மாதிரி அங்கு காட்சிப்படுத்தப்பட்டது.

volocopter என்னும் ஜெர்மனியை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், பேட்டரியில் இயங்கும் இந்த பறக்கும்  டாக்ஸியை வடிவமைத்து உலகிற்கு காண்பித்து உள்ளது. இந்த பறக்கும்  டாக்ஸியில் 2 பேர் பயணம் செல்லும் வகையில், உடமைகளை வைக்க தனி லக்கேஜ் கம்பார்ட்மென்ட் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வடிவமைக்கப்பட்டு இந்த பறக்கும் டாக்ஸி திட்டமானது 2024 ஆம் ஆண்டு முதல் ரோமில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இவை பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment