Connect with us

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் இத்தகைய அதிர்ச்சியா!!!

tn 11th result 2022 declared new image final new

தமிழகம்

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் இத்தகைய அதிர்ச்சியா!!!

இன்றைய தினம் தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் நடப்பாண்டில் பதினொன்றாம் வகுப்பில் 90% இற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.07 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

8 லட்சத்து 43 ஆயிரத்து 675 பேர் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 59 ஆயிரத்து 756 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியது. கடந்த 2020 மார்ச் பொதுத்தேர்வில் தேர்ச்சி 96.04% இருந்த நிலையில் இந்த ஆண்டு 5.99% குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் மாணவிகள் மட்டும் 94.99 சதவீதமும் மாணவர்கள் வெறும் 84.56 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் மாணவிகள் 10.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வில் 82.27 சதவீத அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இத்தகைய தேர்வு  முடிவானது மாணவர்கள் மற்றும் பள்ளிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top