News
மேற்கு வங்க முதல்வர் டெல்லி 3 நாள் பயணம்
ஏப்ரல் 6-ஆம் தேதி இந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மேலும் மே இரண்டாம் தேதி அவற்றின் ஒட்டுமொத்த முடிவுகளும் வெளியேற்றப்பட்டது அவற்றின் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட மாநிலமாக காணப்பட்ட மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்து மீண்டும் முதல்வராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பொறுப்பில் உள்ளார் மம்தா பானர்ஜி.மேலும் மூன்றாவது முறையாக ஆட்சியை மேற்குவங்கத்தில் தக்கவைத்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
மேலும் அவர் அப்போது மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை முழக்கமிட்டு வருகிறார். மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவருக்கு காலில் பயங்கரமான அடி விழுந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலை தற்போது அவர் மூன்றாவது முறையாக அந்த மாநிலத்தின் முதல்வராக தொடர்கிறார் என்பது பல மாநில முதல்வர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக காணப்படுகிறது.
தற்போதைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். மேலும் இந்த மூன்று நாள் பயணத்தில் ஜனாதிபதி ராம்நாத் மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி சில எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
