’நாங்களும் உங்கள மாதிரிதான் நண்பா’ ……..’பீஸ்ட்’ டிரைலருக்கு இவங்களும் வெயிட்டிங்கா ?
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்து இருப்பவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் நடித்த மாஸ்டர் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூலையும் வாரி குவித்தது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த திரைப்படமான ’பீஸ்ட்’ வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
‘பீஸ்ட் ‘ படத்தின் டிரைலர் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்தது. இதனிடையே ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் வகையில் சன் பிக்சர்ஸ் தன்னுடைய டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் ‘நாங்களும் உங்கள மாதிரிதான் ‘பீஸ்ட்’ டிரைலருக்கு வெயிட்டிங் நண்பா’ என்று பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Naangalum ungala madhiri #BeastTrailer ku waiting nanba⁰????@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastModeON #Beast #BeastTrailerOnApril2 pic.twitter.com/WpwyrLrUCL
— Sun Pictures (@sunpictures) March 31, 2022
