ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூபாய் 16800 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்-தொடங்கி வைக்கிறார் மோடி;

ஒருபுறம் தமிழகத்தில் வரிசையாக நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு விதமான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மறுபுறமோ இந்திய அளவில் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் புதுப்புது நலத்திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தற்போது ஜார்கண்டில் இன்று 16,000 கோடிக்கு அதிகமான திட்டங்கள் தொடங்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூபாய் 16 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். தேவ்கரில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்காக அர்ப்பணிக்கிறார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை மையத்தையும், உள்நோயாளிகள் பிரிவையும் பிரதமர் திறந்து வைக்கிறார். இன்று மாலை பாட்னா செல்லும் பிரதமர் அங்கிருந்து பீகார் சட்டப்பேரவை நூற்றாண்டு கொண்டாட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...