68 ஜாதியிலிருந்து ஒரு ஜாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது தான் சமூகநீதி புரட்சியா? தீர்ப்புக்கு கருணாஸ் வரவேற்பு!

இன்றைய தினம் காலையில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. என்னவென்றால் அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு கொடுக்கபட்ட 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செய்திருந்தது.வன்னியர்

இதற்கு தற்போது கருணாஸ் வரவேற்பு அளித்துள்ளார். அதன்படி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது உண்மையான சமூக நீதி கிடைக்க வெற்றி என்று கருணாஸ் கூறியுள்ளார்.

சீர்மரபினர், சமுதாய தோழர்கள் உழைப்பிற்கும், உண்மையான சமூக நீதிக்கும் கிடைத்த வெற்றி என்று கருணாஸ் கூறியுள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு ஜாதிக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியது சட்டவிரோதம் என்று கருணாஸ்  கூறியுள்ளார்.

ஒரு ஜாதிக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என நீதிமன்றம் கூறியுள்ளது. 68 ஜாதியிலிருந்து ஒரு ஜாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது தான் சமூக புரட்சியா? என்ற கேள்வியும் கருணாஸ் கேட்டுள்ளார்.

வன்னியர்களுக்கு  10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து  செய்யப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முக்குலத்தோர் புலிப்படை வரவேற்கிறது என்று கருணாஸ் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment