Connect with us

வெள்ளிப்பதக்கத்துடன் நாடு திரும்பிய மீராபாய் சானுவுக்கு உற்சாக வரவேற்பு!

Sports

வெள்ளிப்பதக்கத்துடன் நாடு திரும்பிய மீராபாய் சானுவுக்கு உற்சாக வரவேற்பு!

5f345caf67860df43d003268d3712ea2

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நூற்றுக்கும் அதிகமான இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மீராபாய் சானு என்ற ஒரே ஒரு வீராங்கனை மட்டுமே இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கத்தை இதுவரை பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பளூ தூக்கும் போட்டியில் அவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தது அடுத்து வெள்ளிப்பதக்கம் அவருக்கு கிடைத்தது.

மேலும் இந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை சீன வீராங்கனை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தி உள்ளதால் மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு சற்று முன்னர் நாடு திரும்பினார். டோக்கியோவில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்தடைந்த மீராபாய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Sports

To Top