இட்லி சாப்பிட்டா உடல் எடை குறையுமா? என்ன இட்லிபா அது.. புதுசா ட்ரை பண்ணலாம் வாங்க..

இட்லி என்பது எல்லா நேரத்திலும் சாப்பிடக்கூடிய விருப்பமான காலை உணவாகும். இந்த இட்லி பெரும்பாலும் சூடான சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் இணைத்து சாப்பிட சுவையாக இருக்கும். வேகவைத்த, இலகுவான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய இட்லி, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய ஆர்வலர்களிடையே மிகவும் பிடித்தமானது.

ஆரோக்கியமான இந்திய உணவுகளில் ஒன்றான இட்லி குறைந்த கலோரிகள், நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதற்கும் உதவுகிறது. இது மட்டுமின்றி, இட்லி சாப்பிடுவது நீண்ட காலத்திற்கு நம்மை நோய்நொடி இல்லாமல் வைத்திருக்கும்,

அதாவது உங்கள் பசியைத் தணிக்கும். நீங்கள் எடை குறைக்கும் பயணத்தில் இருப்பவராக இருந்தால், உங்கள் எடை குறைப்பதற்கு ஏற்ற இட்லி ரெசிபி இதோ..

இந்த சத்தான ஓட்ஸ் இட்லி தயார் செய்வது மிகவும் எளிது. இது ஒரு சரியான காலை உணவாக அனைவருக்கும் அமையும், இந்த இட்லியில் ஆரோக்கியமான ஓட்ஸ் உள்ளது.

ஓட்ஸ் இட்லி செய்ய தேவையானவை:

ஓட்ஸ் பொடி : 2 கப்

ஓட்ஸ் வறுத்த கலவைக்கு: 1 டீஸ்பூன்

எண்ணெய் :1 டீஸ்பூன்

கடுகு : 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு :1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு :1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் : 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் : 1

கேரட் : 1 கப்,

உப்பு : தேவையான அளவு

மல்லி தலை : 1/2 கப்

தயிர் : 2 கப்

ஓட்ஸ் இட்லி செய்வது எப்படி?

ஓட்ஸ் பொடிக்கு முதலில்

1. ஒரு கடாயில் 2 கப் ஓட்ஸை எடுத்து, அவற்றை சுமார் 5 நிமிடங்கள் பொன்னிறமாக வறுக்கவும். மிதமான தீயில் எண்ணெயை சூடாக்கவும்.

2.அதில் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.

3.இப்போது உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். நன்கு கலந்து, பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

4. நறுக்கிய கேரட் மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் சமைக்கவும்.

5. இட்லி மாவில் சேர்க்கும் முன் கலவையை சில நிமிடங்களுக்கு ஆறவிடவும்.

இட்லி மாவுக்கு:

1. தயாரிக்கப்பட்ட ஓட்ஸ் தூளை ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்றவும்.

2.இதில் உப்பு மற்றும் வறுத்த கலவையை சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.

3.இப்போது தேவையான அளவு தயிர் சேர்த்து ஒரு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

4.இப்போது மாவை தயார் செய்து சில நிமிடங்கள் மூடி வைக்கவும்.

5.இப்போது இட்லி அச்சுகளை தயார் செய்யவும். தட்டில் நெய் தடவி தயார் செய்யவும் .

6. இட்லி மாவை அச்சில் ஊற்றி 5 முதல் 10 நிமிடம் வேக வைக்கவும்.

7. சுவையான மற்றும் ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி தேங்காய் சட்னியுடன் பரிமாற தயாராக உள்ளது.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews