பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க, ஹைதராபாத் – மதுரை கோட்டத்தில் வாராந்திர சிறப்பு ரயில்களை தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண். 07191, கச்சேகுடா – மதுரை வாராந்திர சிறப்புக் கட்டணம் ஏப்ரல் 17, 24, மே 01, 08, 15, 22, 29, ஜூன் 05, 12, 19 & 26 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) இரவு 08:50 மணிக்கு ஹைதராபாத்த்தில் இருந்து புறப்படும். மதுரை இரவு 08:45 மணிக்கு வந்தடையும்
திரும்பும் திசையில் ரயில் எண். 07192, மதுரை – ஹைதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் – 19, 26, மே – 03, 10, 17, 24, 31, ஜூன் – 07, 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) மதுரையில் இருந்து காலை 05.30 மணிக்குப் புறப்பட்டு, ஹைதராபாத் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் நெல்லூர், ஓங்கோல், திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
ரயில் பெட்டியில், ஒரு ஏசி முதல் வகுப்பு பெட்டி, 2 ஏசி இரண்டு அடுக்கு பெட்டிகள், 6- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 7- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 2- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், உடல் ஊனமுற்ற பயணிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் ஒரு லக்கேஜ் கம் பிரேக் ஆகியவை அடங்கும்.
கடிகாரத்தின் “பில்” காட்டிய அண்ணாமலை – திமுகவிடம் 4 கேள்விகள் முன்வைப்பு !
வாராந்திர சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏப்ரல் 14ம் தேதி காலை 08.00 மணிக்கு திறக்கப்பட்டது.