காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கேற்ப தமிழகத்தில் உள்ள பல காவலர்கள் மக்களுக்கு மிகுந்த நண்பர்களாக,தோழனாக காணப்படுகின்றனர். அவர்கள் காலநிலை,நேரம், காலம் பார்க்காமல் தங்களது பணியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருப்பர்.
தமிழகத்தில் விடுமுறை இல்லாத வேலை எது என்றால் அது காவல் பணி என்று கூறும் அளவிற்கு காணப்படுகிறது. இந்த நிலையில் காவலர்களுக்கு வார விடுமுறை குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல அதிரடி அறிவிப்புகளை கூறியுள்ளார்.
அதன்படி காவலருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரை காவலர்கள் அனைவரும் இனி வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவுபடி காவலர் வார விடுமுறை தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் காவலர்களுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை அளிக்கப்படும் என செப்டம்பரில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார் முதல்வர் முக ஸ்டாலின்.
சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவை காவலர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக அமையும்.