ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெலின் திருமண பத்திரிக்கை- தமிழில் அச்சடிக்கப்பட்டு வரவேற்பு!

ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணியிலும் அதிரடி வீரர் என்று குறிப்பிட்ட ஒருவரை ரசிகர்கள் கூறுவார்கள். அந்தப்படி ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்ரவுண்டராக மேக்ஸ்வெல் உள்ளார். இவர் கடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை playoffக்கு இழுத்து சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவருக்கு மார்ச் மாதம் திருமணம் ஆக உள்ளதாக தகவல்கள் கசிந்தன. இந்த திருமண நாளிதழ் தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது காணப்படுகிறது. ஏனென்றால் அதிரடி பேட்ஸ்மேன்களில் திருமண பத்திரிக்கை தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா வீரரான மேக்ஸ்வெல், தமிழகத்தை பூர்வமாக கொண்டு ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் விழி ராமனை காதலித்து வருகிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்தது.

இந்த நிலையில் நடப்பாண்டு 2022 மார்ச் 27ம் தேதியில் இவர்களின் திருமணம் மெல்போர்னில் நடக்க உள்ளது. இதனால் திருமண அழைப்பிதழ் தமிழில் அச்சடிக்கப்பட்டது உள்ளது. இது அனைவரிடம் பாராட்டை பெற்று உள்ளதாக காணப்படுகிறது. இணையதளத்தில் அவரது பத்திரிகைக்கு பலரும் நல்ல விதமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.