ஸ்வாதி மோகன்

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை வழிநடத்தும் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வாதி மோகன் என்பவர் பணியாற்றியுள்ளார்.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா

ஸ்வாதி மோகன் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தார். தனது ஒரு வயதில் பெற்றோருடன் அமெரிக்க சென்றார்.

டாக்டர் பட்டம்

விண்வெளி படிப்பில் ஆராய்ச்சி முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

பெர்சிவரன்ஸ் ரோவர் திட்டம்

இவர் 2013 ஆம் ஆண்டு முதலே பெர்சிவரன்ஸ் ரோவர் திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட பெர்சிவரன்ஸ் ரோவர்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பப்பட்ட பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் தற்போது செவ்வாயில் தரையிறங்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு

இந்த விண்கலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.