டேஸ்ட்டியான உருளைக் கிழங்கு வறுவல் ரெசிப்பி!!
தேவையானவை: உருளைக் கிழங்கு -1 /2 கிலோ
தேவையானவை: வெங்காயம்-3
தேவையானவை: மிளகுத் தூள் -2 ஸ்பூன்
தேவையானவை: கடுகு- ¼ ஸ்பூன்,
தேவையானவை: சீரகம்- 1/4 ஸ்பூன்,
தேவையானவை: எண்ணெய்- தேவையான அளவு
தேவையானவை: உப்பு- தேவையான அளவு
தேவையானவை: கறிவேப்பிலை- கைப்பிடியளவு
செய்முறை: 1. உருளைக் கிழங்கை வட்டவடிவில் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அடுத்து வெங்காயம், உப்பு, உருளைக் கிழங்கை போட்டு வதக்கவும்.
செய்முறை: 3. அடுத்து மிளகுத் தூள் போட்டு கிளறி இறக்கினால் உருளைக் கிழங்கு வறுவல் ரெசிப்பி ரெடி.