கல்யாண வீட்டு டேஸ்ட்டியான சாம்பார் ரெசிபீஸ்!

தேவையான பொருள்கள்: துவரம்பருப்பு – 25 கிராம்

தேவையான பொருள்கள்: பாசிப்பருப்பு – 25 கிராம்

தேவையான பொருள்கள்: கடலைப்பருப்பு – 25 கிராம்

தேவையான பொருள்கள்: தக்காளி – 2

தேவையான பொருள்கள்: பச்சை மிளகாய் – 1

தேவையான பொருள்கள்: சின்ன வெங்காயம் – 4

தேவையான பொருள்கள்: சாம்பார் பொடி – 1 டீஸ்புன்

தேவையான பொருள்கள்: மஞ்சள்தூள் – அரை டீஸ்புன்

தேவையான பொருள்கள்: பெருங்காயத்தூள் –1/4 டீஸ்புன்

தேவையான பொருள்கள்: கடுகு –1/2 டீஸ்புன்

தேவையான பொருள்கள்: உளுந்தம்பருப்பு –1/2 டீஸ்புன்

தேவையான பொருள்கள்: கறிவேப்பிலை – சிறிதளவு

தேவையான பொருள்கள்: கொத்தமல்லி – சிறிதளவு

தேவையான பொருள்கள்: உப்பு – சுவைக்கு ஏற்ப

தேவையான பொருள்கள்: எண்ணெய் – 3 டீஸ்புன்

செய்முறை: கடாயில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு நன்கு வறுத்து ஆறவிடவும். ஆறிய பிறகு பொடி செய்து கொள்ளவும்.

செய்முறை: பின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.

செய்முறை: கடாயில் 2 டீஸ்புன் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

செய்முறை: தக்காளி நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும். பிறகு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

செய்முறை: பின்பு கடுகு, உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் .  சுவையான கல்யாண சாம்பார் தயார்.