மிகவும் ருசியான அவல் லட்டு ரெசிப்பி!
தேவையான பொருட்கள் : அவல் – அரை கிலோ
தேவையான பொருட்கள் : சர்க்கரை – அரை கிலோ
தேவையான பொருட்கள் : ரோஸ்வாட்டர் – சிறிது
தேவையான பொருட்கள் : நிலக்கடலை பருப்பு – 100 கிராம்
செய்முறை : அவலை தண்ணீரில் கொட்டி நன்கு அலசி அசுத்தங்களை எல்லாம் கழுவி நீக்கவும். சிறு கற்களும் இல்லாதபடி சுத்தம் செய்ய வேண்டும்.
செய்முறை : இப்படிச் சுத்தம் செய்தான பிறகு வெயிலில் துணியை விரித்து அதன் மேல் அவலை பரவலாகப் பரப்பி உலர்த்த வேண்டும்.
செய்முறை : நிலக்கடலைப் பருப்பை வறுத்து மேல் தோலை நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். சர்க்கரையை பாகு காய்ச்சி அதில் முதலில் அவலைப் போட்டு கிளற வேண்டும்.
செய்முறை : பிறகு நிலக்கடலைப் பருப்பைச் சேர்த்து கிளற வேண்டும். கடைசியாக ரோஸ் வாட்டரைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். அடுப்பை விட்டு இறக்கி சூடு முழுமையாக ஆறும் முன்பாகவே உருண்டைகளாக உருட்டவும்.