பிரியாணி ஸ்டைலில் தக்காளி சாதம் செய்யலாம் வாங்க!!

தேவையானவை: அரிசி – 1/2 கிலோ

தேவையானவை: வெங்காயம் – 2

தேவையானவை: தக்காளி – 5

தேவையானவை: இஞ்சி- 1 துண்டு

தேவையானவை: பூண்டு- 1

தேவையானவை: பட்டை- 4

தேவையானவை: கிராம்பு- 5,

தேவையானவை: ஏலக்காய் – 5

தேவையானவை: பிரியாணி இலை – 5

தேவையானவை: மிளகாய்த் தூள் – 11/2 டீஸ்பூன்

தேவையானவை: மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

தேவையானவை: மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

தேவையானவை: பச்சை மிளகாய் – 5

தேவையானவை: தயிர் – 1 டம்ளர்

தேவையானவை: நெய் – 150 மில்லி அளவு

தேவையானவை: கொத்தமல்லி தழை- கைப்பிடியளவு

தேவையானவை: புதினா – கைப்பிடியளவு

தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 1.    வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை: 2.    அடுத்து குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் போட்டு தாளித்து அத்துடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.

செய்முறை: 3.    அடுத்து கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் போட்டு வதக்கவும்.

செய்முறை: 4.    அடுத்து உப்பு, தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வேகவிட்டு, அரிசியைப் போட்டு அதனைவிட இரண்டு மடங்கு தண்ணீர்விட்டு வேக விடவும்.

செய்முறை: 5.    அடுத்து விசில் வந்தபின்னர் புதினா இலை தூவி இறக்கினால் தக்காளி சாதம் ரெடி.