ஈவினிங் ஸ்நாக்ஸாக 10 நிமிடத்தில் வெஜ் மோமோஸ் ரெசிப்பி!

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒரு கப்

தேவையான பொருட்கள்: வெங்காயம் – 1

தேவையான பொருட்கள்: கேரட் – 1

தேவையான பொருட்கள்: முட்டைகோஸ் – அரை கப்

தேவையான பொருட்கள்: குடைமிளகாய் – 1

தேவையான பொருட்கள்: சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: சில்லி சாஸ் – ஒரு தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: எண்ணெய் – சிறிதளவு

தேவையான பொருட்கள்: உப்பு – சுவைக்கு ஏற்ப

செய்முறை: முதலில் கோதுமை மாவை உப்பு, எண்ணெய், கொஞ்சமாக சுடுதண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து30 நிமிடங்களுக்கு ஊற வைத்து கொள்ளவும்.

செய்முறை: அடுத்து ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.

செய்முறை: அதில் சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி வைக்கவும்.

செய்முறை: பிசைந்த கோதுமை மாவை பூரி அளவிற்கு தேய்த்து கொள்ளவும். இதன் நடுவில், வதக்கிய காய்களை மசாலாவை வைத்து, அனைத்து பக்கமும் சேர்த்து ஒருசேர மூடவும்.

Fill in some text