திருநெல்வேலி ஸ்பெஷல் கோதுமை அல்வா ரெசிப்பி!

தேவையான பொருட்கள்.: சம்பா கோதுமை – ஒரு கப்,

தேவையான பொருட்கள்.: சர்க்கரை – இரண்டரை கப்,

தேவையான பொருட்கள்.: நெய் – அரை கப்,

தேவையான பொருட்கள்.: எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்,

தேவையான பொருட்கள்.: ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,

தேவையான பொருட்கள்.: கேசரி பவுடர் – 2 சிட்டிகை,

தேவையான பொருட்கள்.: முந்திரி- 10,

செய்முறை.: கோதுமையைக் கழுவி முதல் நாள் இரவே நீரில் ஊற வைக்கவும். மறுநாள் நீரை வடித்து, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

செய்முறை.: இதை வெள்ளை துணியில் போட்டு நன்கு அழுத்தி பாலை வடிகட்டி எடுக்கவும், மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை வடிகட்டவும்.

செய்முறை.: இது போல் மூன்று நான்கு முறை பாலை வடித்து எடுத்து கொள்ளவும், இரண்டு மணி நேரம் தனியாக வைத்து கொள்ளவும். இதை சிதறாமல் வடிகட்டவும்.

செய்முறை.: முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்தெடுக்கவும். கடாயில் சர்க்கரை, கோதுமைப்பால், நெய் கலவை சேர்த்துக் கிளறவும்.

செய்முறை.: கோதுமைப்பால் கெட்டியாக வரும்போது மீண்டும் நெய் கலவை சேர்த்துக் கிளறவும்.

செய்முறை.: கோதுமைப் பால் கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் வரும்போது, சிறிதளவு தண்ணீரில் கரைத்த கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை வரை கிளறவும்.

செய்முறை.: முந்திரி, பாதாம், வெள்ளரி விதை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அல்வா கையில் ஒட்டாமல் உருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும்.

செய்முறை.: நெய் தடவிய தட்டில் பரத்தி சுடச்சுடவோ ஆறிய பிறகு துண்டுகளாக்கியோ பரிமாறவும்.