திகட்டாத திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி!
தேவையான பொருட்கள்:- சீரக சம்பா அரிசி – 2 கப்
தேவையான பொருட்கள்:- சிக்கன் – 1/2 கிலோ
தேவையான பொருட்கள்:- சின்ன வெங்காயம் – 2 கப்
தேவையான பொருட்கள்:- தக்காளி – 1
தேவையான பொருட்கள்:- பூண்டு – 15 பல்
தேவையான பொருட்கள்:- இஞ்சி – தேவைக்கேற்ப
தேவையான பொருட்கள்:- பச்சை மிளகாய் – 4
தேவையான பொருட்கள்:- புதினா இலைகள் – 1/2 கப்
தேவையான பொருட்கள்:- கொத்தமல்லி – 1/2 கப்
தேவையான பொருட்கள்:- தயிர் – 1/4 கப்
தேவையான பொருட்கள்:- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:- கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:- உப்பு – தேவைக்கேற்ப
தேவையான பொருட்கள்:- எண்ணெய் – 1/4 கப்
தேவையான பொருட்கள்:- நெய் – 3 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:- சீரகம் – 1/2 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:- மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:- இலவங்கப்பட்டை – 1 துண்டு
தேவையான பொருட்கள்:- கிராம்பு – 3
தேவையான பொருட்கள்:- ஏலக்காய் – 3
தேவையான பொருட்கள்:- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:- முதலில் கோழி துண்டுகளை கழுவி, எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைக்கவும். இதை அரை மணி நேரம் ஊற விடவும்.
செய்முறை:- அரிசியைக் கழுவி, தேவையான அளவு தண்ணீரில் சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். தண்ணீரை முழுவதுமாக வடிகட்டவும்.
செய்முறை:- வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, புதினா இலைகள், கொத்தமல்லி தழை – காய்கறிகளை கழுவி, நறுக்கி தயார் செய்யவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் எடுத்து பொடியாக அரைக்கவும்.
செய்முறை:- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கி, பின்னர் அரைக்க பட்ட மசாலாவை சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
செய்முறை:- பின்னர், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.அடுத்து புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கவும்.
செய்முறை:- இதனுடன் தயிரையும் சேர்க்கவும்.எல்லாவற்றையும் ஒன்றாக 5 நிமிடங்கள் வறுக்கவும்.
செய்முறை:- அடுத்து நீரின் சரியான அளவைச் சேர்க்கவும். சீரக சம்பா அரிசிக்கு 1 கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் தேவை. இப்போது ஊறவைத்த சீரக சம்பா அரிசியைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.
செய்முறை:- கொதித்ததும் மூடி மிதமான சூட்டில் 15 நிமிடம் வேகவிடவும். பின்னர் அதை திறந்து மேலே ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி சுவையாக ரசித்து சாப்பிடுங்கள்.