மிகவும் ருசியான வெஜ் புலாவ் ரெசிப்பி!
தேவையான பொருள்கள்: பாஸ்மதி அரிசி – 1 கப்
தேவையான பொருள்கள்: பட்டாணி – 50 கிராம்
தேவையான பொருள்கள்: காலிபிளவர் – 50 கிராம்
தேவையான பொருள்கள்: கேரட் – 50 கிராம்
தேவையான பொருள்கள்: பீன்ஸ் – 50 கிராம்
தேவையான பொருள்கள்: பச்சை மிளகாய் – 3
தேவையான பொருள்கள்: பெரிய வெங்காயம் – 1
தேவையான பொருள்கள்: தக்காளி – 1
தேவையான பொருள்கள்: இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
தேவையான பொருள்கள்: பட்டை – சிறிதளவு
தேவையான பொருள்கள்: கிராம்பு – 2
தேவையான பொருள்கள்: தேங்காய் பால் – 1 கப்
தேவையான பொருள்கள்: கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தேவையான பொருள்கள்: உப்பு – தேவைக்கு ஏற்ப
தேவையான பொருள்கள்: எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
தேவையான பொருள்கள்: நெய் – 2 தேவைக்கு ஏற்ப
செய்முறை: பாஸ்மதி அரிசியை தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும். காலிபிளவர், கேரட், பீன்ஸ், தக்காளி எல்லாவற்றையும் ஒரே அளவாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
செய்முறை: அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
செய்முறை: வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
செய்முறை: பிறகு பட்டாணி, நறுக்கி வைத்த காலிபிளவர், கேரட், பீன்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி ஒரு கப் தேங்காய் பால், 2 கப் தண்ணீர், மற்றும் உப்பு, சேர்க்கவும்.
செய்முறை: கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து மூடிக்கொள்ளவும்.
செய்முறை: நீராவி வந்ததும் குக்கரில் வெயிட் போட்டு 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும் சுவையான வெஜ் புலாவ் இதோ தயார்.