குழந்தைகளுக்கு பிடித்தமான ஃப்ரெஞ்ச் ஆம்லெட்!

தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 2 வேகவைத்து மசித்தது.

தேவையான பொருட்கள் : வெங்காயம் – 1

தேவையான பொருட்கள் : தக்காளி – 1

தேவையான பொருட்கள் : பச்சைமிளகாய்- 3,

தேவையான பொருட்கள் : கொத்தமல்லிதழை – தேவைக்கு ஏற்ப

தேவையான பொருட்கள் : முட்டை – 3

தேவையான பொருட்கள் : மிளகு பொடி – ஒரு தேக்கரண்டி

தேவையான பொருட்கள் : மிளகாய்த்தூள் – கால் தேக்கரண்டி

தேவையான பொருட்கள் : உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை : உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும். அடுத்து தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

செய்முறை : மூன்று முட்டையை உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்றாக நுரை வரும்படி அடித்துக்கொள்ளவும் ,ஒரு நான் ஸ்டிக் பானில் சிறிது எண்ணெய் தடவி முட்டையை ஒரு லேயர் ஊற்றவும்.

செய்முறை : அதன் மேல் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை, சிறிது மிளகுதூள் தூவி அதன் மேல் இன்னொரு லேயர் முட்டையை ஊற்றவும்.

செய்முறை : மிதமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும். மறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும். பொன்னிற ஃப்ரெஞ்ச் ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடி.