டேஸ்ட்டியான இறால் ப்ரைடு ரைஸ்!!

பாசுமதி அரிசி – இரண்டு டம்ளர்

முட்டைகோஸ் – கால் அளவு

கேரட் – 2

குடைமிளகாய் – 1

பெரிய வெங்காயம் – 1

இஞ்சி – பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

இறால் –250 கிராம்

சோயா சாஸ் – 2 ஸ்பூன்

சில்லி சாஸ் – 2 ஸ்பூன்

முட்டை- 2

மிளகுத்தூள் – ½ ஸ்பூன்

நெய் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வெங்காயத்தாள் – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 1.   பாசுமதி அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும். இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், குடை மிளகாய், முட்டைக்கோஸ், கேரட், பச்சை மிளகாய், வெங்காயத்தாளினை நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை: 2.   அடுத்து வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், குடை மிளகாய், பச்சை மிளகாய், முட்டை கோஸ், கேரட் போட்டு வதக்கவும்,

செய்முறை: 3.   அடுத்து இறாலை போட்டு வதக்கி, முட்டைகளை ஊற்றி கிளறி உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள் போட்டு கிளரவும்.

செய்முறை: 4.   அடுத்து வெங்காயத்தாளை தூவி இறக்கினால் இறால் ப்ரைடு ரைஸ் ரெடி.