டேஸ்ட்டியான காளான் டிக்கா ரெசிப்பி!!
தேவையானவை : காளான்- 15
தேவையானவை : குடை மிளகாய் – 1
தேவையானவை : வெங்காயம் – 2
தேவையானவை : பச்சை மிளகாய் – 3
தேவையானவை : மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை : டிக்கா ஸ்டிக் – 1
தேவையானவை : இஞ்சி- பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
தேவையானவை : சோம்பு – 1 ஸ்பூன்
தேவையானவை : வெந்தயம் – 1/2 ஸ்பூன்
தேவையானவை : கடுகு – 1 ஸ்பூன்
தேவையானவை : எண்ணெய்- தேவையான அளவு,
தேவையானவை : உப்பு – தேவையான அளவு
செய்முறை : 1. காளானை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தினையும் நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை : 2. வாணலியில் சோம்பு, வெந்தயம், கடுகு மூன்றையும் போட்டு வறுத்டு மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
செய்முறை: 3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடித்த பொடி, வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், மிளகுத் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், காளான் சேர்த்து அரை வேக்காடாக வதக்கவும்.
செய்முறை:. 4. அடுத்து இதனை ஸ்டிக்கில் குடை மிளகாய் துண்டு, வெங்காயத் துண்டு, காளான் என மாற்றி செருகி எடுத்துச் சாப்பிட்டால் டேஸ்ட்டியான காளான் டிக்கா ரெடி.