டேஸ்ட்டியான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு!!

தேவையானவை: கத்தரிக்காய் – 1/2 கிலோ

தேவையானவை: சின்ன வெங்காயம் – 15

தேவையானவை: தக்காளி – 2

தேவையானவை: பூண்டு – 1

தேவையானவை: கடுகு – 1/4 ஸ்பூன்

தேவையானவை: வெந்தயம் – 1/2 ஸ்பூன்

தேவையானவை: மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

தேவையானவை: தனியா தூள் – 1 ஸ்பூன்

தேவையானவை: புளி – எலுமிச்சை அளவு

தேவையானவை: நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்

தேவையானவை: கறிவேப்பிலை – தேவையான அளவு

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

செய்முறை : 1. கத்தரிக்காயின் காம்பின் நுனியினை லேசாக நறுக்கிய பின்னர் 8 துண்டுகளாக காம்பினை விட்டு நறுக்கி கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

செய்முறை : 2.  தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

செய்முறை : 3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.

செய்முறை : 4. அடுத்து கத்தரிக்காயை போட்டு வதக்கி மிளகாய்த் தூள், தனியா தூள், சேர்க்கவும். அடுத்து புளி கரைசல், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.

செய்முறை : 5. எண்ணெய் பிரிந்துவரும் போது இறக்கினால் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெடி.