சுவையான சேப்பங்கிழங்கு குருமா குழம்பு!!
தேவையானவை : சேப்பங் கிழங்கு –1/2 கிலோ
தேவையானவை : தக்காளி – 2
தேவையானவை : சின்ன வெங்காயம் – 10
தேவையானவை : மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
தேவையானவை : மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை : தனியாத் தூள் – ½ ஸ்பூன்
தேவையானவை : சோம்பு- ½ ஸ்பூன்
தேவையானவை : தேங்காய் – கால் மூடி
தேவையானவை : பூண்டு -5
தேவையானவை : கறிவேப்பிலை – சிறிதளவு
தேவையானவை : எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை : 1. சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை : 2. பூண்டின் தோல் உரித்துக் கொள்ளவும். அடுத்து மிக்சியில் சோம்பு மற்றும் தேங்காய் சேர்த்து தேங்காய்ப் பால் பிழிந்து கொள்ளவும்.
செய்முறை : 3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியை சேர்த்து வதக்கி சேப்பங்கிழங்கினைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
செய்முறை : 4. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
செய்முறை : 5. இறுதியில் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிட்டு கறிவேப்பிலை போட்டு இறக்கினால் சேப்பகிழங்கு குருமா குழம்பு ரெடி.