குழந்தைகளுக்கு வாயில் வைத்ததும் கரையும் ஸ்வீட் கார்ன் அல்வா!

தேவையான பொருட்கள் • ஸ்வீட் கார்ன்-1 கப்

தேவையான பொருட்கள் • ரவை-1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள் • முந்திரி-10

தேவையான பொருட்கள் • கிஸ்மிஸ்-15

தேவையான பொருட்கள் • சர்க்கரை -1/2 கப்

தேவையான பொருட்கள் • நெய்- 3-5 தேக்கரண்டி

தேவையான பொருட்கள் • பால்-1/2 கப்

தேவையான பொருட்கள் • ஏலக்காய் தூள்-1/4 தேக்கரண்டி

செய்முறை • முதலில் ஸ்வீட் கார்னை மிக்ஸியில் போட்டு பரபரப்பாக அரைத்து கொள்ளவும்.ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி கிஸ்மிஸை போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

செய்முறை • பின்பு ரவையை நெய்யில் வாசனை வரும்வரை பொன்னிறமாக வதக்க வேண்டும்.

செய்முறை • இதனுடன் அரைத்து வைத்த கார்னை ஒன்று சேர்த்து 8 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.

செய்முறை • இதனுடன் பால் சேர்த்து விடாமல் கிளறவும். பால் நன்றாக வற்றிய பின் சுவைகேற்ப சர்க்கரை சேர்த்து கொள்ளவும் .

செய்முறை • கடைசியாக ஏலக்காய் தூள்,சிறிதளவு நெய்,வறுத்து வைத்துள்ள முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து சூடாக கிளறவும். இப்போது சூடான சத்து நிறைந்த ஸ்வீட் கார்ன் அல்வா தயார்.