தித்திக்கும் தேங்காய் பாயசம் ரெசிப்பி!
தேவையான பொருட்கள் : பச்சரிசி – ஒரு தேக்கரண்டி ,
தேவையான பொருட்கள் : வெல்லம் – அரை கப்,
தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் – ஒரு கப்,
தேவையான பொருட்கள் : ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி,
தேவையான பொருட்கள் : முந்திரிப்பருப்பு – 15,
தேவையான பொருட்கள் : நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை: முதலில் குறைந்தது அரிசியை அரை மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஊற வைத்த அரிசியுடன் தேங்காய் துருவலை சேர்த்து மையாக அரைத்திடுங்கள்.
செய்முறை: பிறகு வெல்லத்தை பாகு போன்று காய்ச்சி வடிகட்டிக் எடுத்து கொள்ளுங்கள். வடிகட்டிய வெல்லப் பாகில் அரைத்து வைத்துள்ள அரிசி-தேங்காய் துருவல் மாவைச் சேர்க்கவும். இதனை 5 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைக்கவும்.
செய்முறை: பிறகு அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து அதை பாயாசத்தில் சேர்க்கவும். அவ்வளவுதான் தித்திக்கும், சுவையான அரிசி – தேங்காய் பாயசம் ரெடி.