குலாப் ஜாம் மாதிரி சூப்பரான சுவீட்

தேவையான பொருள்கள் ரவை – அரை கப்

தேவையான பொருள்கள் சீனி – ஒரு கப்

தேவையான பொருள்கள் நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

தேவையான பொருள்கள் ஏலக்காய் பவுடர் – சிறிதளவு

தேவையான பொருள்கள் குங்குமப்பூ பவுடர் – சிறிது

தேவையான பொருள்கள் பேக்கிங் சோடா – கால் டீ ஸ்பூன்

தேவையான பொருள்கள் மில்க் பவுடர் – 2 டீ ஸ்பூன்

தேவையான பொருள்கள் தண்ணீர் – தேவைக்கு

எப்படி செய்வது? ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் போட்டு உருக்குங்க. அதில் ரவையைப் போட்டு நல்லா வதக்குங்க. 5 நிமிஷம் வறுத்தவுடன் ரவையோட பச்சை வாடை போய்விடும்.

எப்படி செய்வது? அப்போது ரவை நல்ல வாசமா வரும். இப்போது சரியாக முக்கால் கப் பால் காய்ச்சி எடுத்து அதனுடன் இரு தடவைகளாக கொஞ்சம் கொஞ்சமாக கலந்து விடுங்க.

எப்படி செய்வது? கலக்கும்போது எல்லாம் நல்லா கிளறி விடுங்க. இப்போ அந்த ரவை எல்லா பாலையும் உள்ளே இழுத்துவிட்டு நல்லா சாஃப்டா மாறும்.

எப்படி செய்வது? ரவை நல்லா வெந்துருக்கான்னு கொஞ்சம் சாம்பிளுக்கு எடுத்து சாப்பிட்டுப் பாருங்க. இந்த நேரத்தில் தீயைக் குறைத்து விடுங்க.

எப்படி செய்வது? நல்லா கெட்டியா ஒரு மாவு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்க. இதை வேறு ஒரு கடாய்க்கு மாற்றிவிடுங்க.

எப்படி செய்வது? இப்போ ஒரு கப் சீனியும், ஒரு கப் தண்ணீரையும் ஊற்றி 3 நிமிஷம் கொதிக்க விடுங்க. நல்லா சீனி கரைந்ததும் கொஞ்சம் பிசுபிசுப்புத் தன்மைக்கு வரும்.

எப்படி செய்வது? இப்பொ கொஞ்சம் ஏலக்காய் பவுடர் சேருங்க. விருப்பம் இருந்தால் குங்குமப்பூ சேருங்க. ஆறிய ரவையுடன் கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா சேருங்க.

எப்படி செய்வது? கால் டீ ஸ்பூன் ஏலக்காய் பவுடர், 2 டீஸ்பூன் மில்க் பவுடர் சேர்த்துக்கோங்க. இப்போ கொஞ்சமா பால் சேர்த்து கைகளால் நல்லா பிசைந்து எடுங்க.

எப்படி செய்வது? இப்போ சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்து விடும். அதிலிருந்து கொஞ்சமாக மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து நல்லா உருட்டி விட்டு சின்னதா ஒரு அழுத்தம் கொடுத்து தட்டையா வடை மாதிரி செய்யுங்க.

எப்படி செய்வது? இதை வாணலியில் எண்ணையை ஊற்றி காயவிட்டு நல்லா பொரித்து எடுங்க. பொன்னிறமானதும் எடுத்து புரட்டிப் போடுங்க.

எப்படி செய்வது? இதைப்போல நல்லா பொரிந்து வந்ததும் அதை எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடுங்க. அதனுடன் சுகர் கரைசலை சேர்த்து ஊறவிடுங்க.

எப்படி செய்வது? 5 நிமிடத்திற்குப் பிறகு வேறு ஒரு பிளேட்டுக்கு மாற்றி விடுங்க. அதைத் தனியாக ஒரு பிளேட்டில் வைத்து பரிமாறுங்க.