நடிகை ஷெரின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் தமிழில் விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, ஸ்டூடண்ட் நம்பர் 1, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.