சாமைக் காரப் புட்டு ரெசிப்பி!!

தேவையானவை : சாமை அரிசி மாவு – 1 கப்

தேவையானவை : தக்காளி  – 1,

தேவையானவை : சின்ன வெங்காயம்  – 10,

தேவையானவை : காய்ந்த மிளகாய் – 4,

தேவையானவை : கடுகு – ½ ஸ்பூன்,

தேவையானவை : உளுந்து – 1 ஸ்பூன்,

தேவையானவை : கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்,

தேவையானவை : சீரகம் – 1 ஸ்பூன்,

தேவையானவை : கறிவேப்பிலை – சிறிதளவு,

தேவையானவை : உப்பு – தேவையான அளவு.

தேவையானவை : எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை : 1. சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை : 2. அடுத்து சாமை அரிசி மாவுடன் சீரகம், உப்பு கலந்து பிசைந்து ஆவியில் வேகவிட்டுக் கொள்ளவும்.

செய்முறை : 3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

செய்முறை : 4. அடுத்து சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு, சாமைப் புட்டு சேர்த்து நன்கு வதக்கினால் சாமைக் காரப் புட்டு ரெடி.