ரோட்டுக்கடை சிக்கன் ரைஸ் ரெசிப்பி!!
தேவையானவை: பாசுமதி அரிசி – 1 கப்
தேவையானவை: வெங்காயம் – 3
தேவையானவை: கோழி – ½ கிலோ
தேவையானவை: முட்டை -3
தேவையானவை: கேரட் – 2
தேவையானவை: பீன்ஸ் – 15
தேவையானவை: வெங்காயத் தாள் – 1
தேவையானவை: குடைமிளகாய் – 2
தேவையானவை: இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
தேவையானவை: சில்லி சாஸ் – 1 மேஜைகரண்டி
தேவையானவை: சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
தேவையானவை: மிளகுத் தூள்-1 மேசைக்கரண்டி
தேவையானவை: நெய் –1/4 கப்
தேவையானவை: உப்பு – தேவையான அளவு
செய்முறை : 1. குடைமிளகாய், வெங்காயம், பீன்ஸ், வெங்காயத்தாள், கேரட் போன்றவற்றினைப் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். சில்லி சிக்கனை தனியாக ரெடி செய்து கொள்ளவும்.
செய்முறை : 2. அடுத்து சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி வெங்காயம், வெங்காயத்தாள், குடை மிளகாய், கேரட், மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அடுத்து அதில் முட்டையினை உடைத்து ஊற்றி வதக்கவும்.
செய்முறை : 3. அடுத்து சில்லி சிக்கன், உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து வேகவிட்டு சாதத்தைப் போட்டு கிளறி இறக்கினால் சிக்கன் ரைஸ் ரெடி.