Fill in someசரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியாக நடித்து ரசிகர்கள் மனதில் ரச்சிதா. இவர் தினேஷ் என்கிற நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  text

இதனிடையே கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதையடுத்து தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார் ரச்சிதா.

தற்போது நடிகை ரச்சிதா, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். அதில் சக போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவை பார்த்ததும் என்னுடைய கிரஷ் நீங்க தான் என முதல் எபிசோடிலேயே சொல்லிவிட்டார். 

ஒரு கட்டத்தில் ராபர்ட்டில் டார்ச்சர் தாங்க முடியாமல் நீங்க எனக்கு அண்ணன் மாதிரி என்று ஓப்பனாகவே சொல்லிவிட்டார் ரச்சிதா.  

இதனிடையே சமீபத்திய பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா எப்படி விளையாடுகிறார் என்பது குறித்தும் ராபர்ட் மாஸ்டரின் செயல்பாடுகள் குறித்தும் ரச்சிதாவின் கணவர் தினேஷ் பேசி உள்ளார். 

வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்கிற கேள்விக்கு பதிலளித்த தினேஷ், நான் வைல்டு கார்டு போட்டியாளராக சென்றால் அங்கு ஒன்றும் மாறப்போறது இல்லை. 

அதுமட்டுமின்றி தற்போது இரண்டு சீரியல்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளதால், பிக்பாஸ் குழுவினர் அழைத்தாலும் வாய்ப்பில்ல ராஜா என்பது தான் என்னுடைய பதிலாக இருக்கும் என கூலாக விளக்கம் அளித்துள்ளார். 

ரச்சிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தாங்கள் இருவரும் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த பேட்டியில் அவர் சூசகமாக தெரிவித்திருந்தார்.