விநாயகர் தனது கையில் வைத்திருக்கும் இனிப்பான பலகாரம் மோதகம். அதை வீட்டில் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாமா..!
தேவையான பொருள்கள் பச்சரிசி – 1 டம்ளர்
தேவையான பொருள்கள் பாசிப்பருப்பு – கால் டம்ளர்
தேவையான பொருள்கள் தண்ணீர் – இரண்டரை கப்
தேவையான பொருள்கள் நெய் – சிறிதளவு
தேவையான பொருள்கள் தேங்காய் துருவல் – கால் கப்
தேவையான பொருள்கள் ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
எப்படி செய்வது? பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் சேர்த்து நல்லா நீரில் அலசி ஊற வைங்க. அப்புறம் தண்ணீரை வடித்துவிட்டு அதை ஒரு வெள்ளைத்துணியில் போட்டு காயவிடுங்க.
எப்படி செய்வது? கொஞ்சம் ஈரமாக இருந்து கையில் ஒட்டாமல் கீழே விழுந்தால் அது தான் பதம். இப்போது அதை எடுத்து ஒரு மிக்சியில் போட்டு பரபரவென அரைத்துக்கொள்ளுங்கள்.
எப்படி செய்வது? ரவை பதத்திற்கு அரைங்க. தொடர்ந்து அந்த மாவை கடாயை சூடுபண்ணி வறுத்து எடுங்க. இதை நல்லா உதிரியாக வரும் வரை வறுங்க. இதை ஒரு டப்பாவில் போட்டு முதலிலேயே தயார் செய்தும் வைக்கலாம்.
எப்படி செய்வது? இப்போது காய்ந்து கொண்டு இருக்கும் மாவுடன் இரண்டரை கப் தண்ணீரை சேர்த்து கிளறிவிடுங்க. 1 டம்ளர் அரிசிக்கு 1 டம்ளர் வெல்லப்பாகு தயார் செய்யுங்க.
எப்படி செய்வது? இப்போ அரிசி மாவானது பசை பதத்திற்கு வந்ததும் தீயைக் குறைத்துக் கொள்ளுங்க.
எப்படி செய்வது? அதைத் தனியாக எடுத்து மூடி வைங்க. தண்ணீர் வற்றி ட்ரை ஆனதும் அதனுடன் தயாரித்து வைத்த வெல்லப்பாகை ஊற்றுங்க.
எப்படி செய்வது? இது சூடாக இருக்கும்போது கொஞ்சம் இளகிப்போய் தான் இருக்கும். ஆறியதும் நல்லா கெட்டியாகிவிடும். இப்போ அடுப்பை அணைத்து விடுங்க.
எப்படி செய்வது? நல்லா ஆறியதும் உருண்டை பிடிக்கலாம். அதனுடன் சிறிதளவு ஏலக்காய் தூள் சேருங்க. அப்புறம் கால் கப் தேங்காய் துருவலை மிக்சியில் பரபரவென அரைத்து அதனுடன் சேருங்க.
எப்படி செய்வது? அதனுடன் கொஞ்சமாக வாசனைக்காக நெய் சேருங்க. இரண்டையும் சேர்த்து நல்லா கலந்து விடுங்க.
எப்படி செய்வது? இப்போ சின்ன சின்ன உருண்டையாகப் பிடித்து கொழுக்கட்டையை இட்லி குக்கரில் வைத்து வேக விடுங்க.
எப்படி செய்வது? இதை ஒரு 7 நமிடம் நல்லா வேகவிட்டு எடுத்துப் பாருங்க. அருமையா வெந்துவிடும். இதுதான் பிள்ளையார்பட்டி மோதகம்.