சைவப் பிரியர்களுக்கான காளான் குழம்பு!!
தேவையானவை: காளான் – அரை கிலோ
தேவையானவை: வெங்காயம் – 2
தேவையானவை: தக்காளி – 2
தேவையானவை: மிளகாய்த் தூள் – 1/4 ஸ்பூன்
தேவையானவை: தனியாத் தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை: சோம்பு – 1 ஸ்பூன்
தேவையானவை: பட்டை- 3
தேவையானவை: கிராம்பு – 2
தேவையானவை: ஏலக்காய் – 2
தேவையானவை: தேங்காய் – கால் மூடி
தேவையானவை: எண்ணெய்- தேவையான அளவு
தேவையானவை: உப்பு- தேவையான அளவு
தேவையானவை: கறிவேப்பிலை- தேவையான அளவு,
தேவையானவை: கொத்தமல்லி இலை- தேவையான அளவு
செய்முறை: 1. வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். காளானை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
செய்முறை: 2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
செய்முறை: 3. அடுத்து காளானைப் போட்டு வதக்கி மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
செய்முறை: 4. அடுத்து மிக்சியில் தேங்காய் மற்றும் சோம்பினைப் போட்டு அரைத்து குழம்பில் ஊற்றி கொதிக்கவிடவும்.
செய்முறை: 5. அடுத்து குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்துவரும்போது கொத்துமல்லி இலை தூவி இறக்கினால் காளான் குழம்பு ரெடி.