ரசம் சாதத்திற்கு ஏற்ற காளான் வறுவல்!!

தேவையானவை: காளான் – அரை கிலோ

தேவையானவை: வெங்காயம் – 1

தேவையானவை: பூண்டு – 1

தேவையானவை: பச்சை மிளகாய் – 3

தேவையானவை: குடை மிளகாய்- 1

தேவையானவை: மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன்

தேவையானவை: மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

தேவையானவை: கரம் மசாலா தூள் –1/2 ஸ்பூன்

தேவையானவை: கடுகு – ½ ஸ்பூன்

தேவையானவை: உளுந்து – ½ ஸ்பூன்

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு

தேவையானவை: கறிவேப்பிலை – தேவையான அளவு

தேவையானவை: கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை: 1.   காளானை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், பூண்டினை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை: 2.   அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

செய்முறை: 3.    அடுத்து காளானை சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து வதக்கி கொத்தமல்லி தூவி இறக்கினால் காளான் வறுவல் ரெடி.