நாவில் எச்சில் ஊறவைக்கும் சிக்கன் தோசை ரெசிப்பி!

தேவையான பொருட்கள்: சிக்கன் கொத்துக்கறி – 200 கிராம்

தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 10

தேவையான பொருட்கள்: தக்காளி – 1

தேவையான பொருட்கள்: இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

தேவையான பொருட்கள்: மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: பச்சைமிளகாய் – 1

தேவையான பொருட்கள்: கரம்மசாலாத்தூள் – 1 சிட்டிகை

தேவையான பொருட்கள்: எண்ணெய் – தேவையான அளவு

தேவையான பொருட்கள்: உப்பு – தேவையான அளவு

தேவையான பொருட்கள்: கொத்தமல்லி – சிறிதளவு

தேவையான பொருட்கள்: முட்டை – 1

தேவையான பொருட்கள்: தோசை மாவு – 1 கப்

செய்முறை: சிக்கன் கொத்துக்கறியை நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.சின்ன வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

செய்முறை: கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

செய்முறை: அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சேர்த்து வதக்கவும் பின்பு கொத்துக்கறியை போட்டு வதக்கி உப்பு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு சுருண்டு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

செய்முறை: தோசைக்கல்லை காயவைத்து மாவை கனமான தோசையாக வார்த்து அதன் மேல் கொத்துக்கறி கலவையை பரப்பி அதன் மேல் முட்டையை அடித்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான சிக்கன் தோசை தயார்.